அட்டப்பளம் உயிர் வாயு மின் நிலையத்தில், அட்டாளைச்சேனை இளைஞர் உயிரிழப்பு




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
அட்டப்பளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயிர்வாயு மூலமான மின் உற்பத்தி நிலையத்தை அகற்றக்கோரி நிந்தவூரில் 2016ல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதை நாம் அறிவோம்.இது சுற்றுச் சூழலுக்குப் பெரிதும் பாதிப்பு என்பது அம்மக்களின் முறையீடாகக் காணப்பட்டது.


அம்பாறை – நிந்தவூர் – அட்டப்பளம் பகுதியில் 2013 ஆம் ஆண்டு அனல் மின் நிலைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அனல் மின் நிலையத்தினால் அம்பறை – காரைத்தீவு கிராமத்திற்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இது இவ்வாறிருக்க, அங்கு பணி புரியும் தொழிலாளிகளுக்கான சட்ட ரீதியான தொழில் ரீதியான பாதுகாப்புக்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பதாக  தொழிலாளர்கள் அங்கலாய்க்கின்றனர். 

இதேவேளை, இன்றைய தினம் நிந்தவூர் அட்டப்பளத்தில் உள்ள அனல்மின் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மேல் மாடியில் இருந்து தவறி  சுழல் பட்டியில் கீழே விழுந்து,  அட்டாளைச்சேனை இளைஞர் அகால மரணமடைந்துள்ளார். 

இது போன்ற உயிரிழப்புக்கள் இனி மேலும் நிகழா வண்ணம் உரிய நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிக பட்ச இழப்பீட்டினையும் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கிறார்கள் பொது மக்கள்.

#ஜனாசா_அறிவித்தல்....

 அட்டாளைச்சேனை, தைக்காநகரைச்  சேர்ந்த  #N.ஹானி (18 வயது) என்பவர் இன்று (09) சனிக்கிழமை காலை  காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

இவர் அக்கரைப்பற்று காதர் GS (@akpcadergs) அவர்களின் சகோதரியின் மகன் ஆவார்.

யா அல்லாஹ்,  அன்னாரின் பாவங்களை மன்னித்து,  ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக.
 ஆமீன்.