இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆவணப்படம்,ஒஸ்கார் விருதை தட்டியது




91வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், நிபுணர்கள் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 'கிரீன் புக்' திரைப்படம் சிறந்த திரைப்படம், உண்மைத் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றுள்ளது.
குறிப்பாக மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்', சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.
ஆஸ்கார் விருதுகள் விழாபடத்தின் காப்புரிமைREUTERS
'தி ஃபேவரைட்', 'ரோமா' ஆகிய திரைப்படங்கள் தலா 10 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், ரோமாவுக்கு மட்டும் 3 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகருக்கான விருதை 'போமேனியன் ராப்சோடி' படத்துக்காக ராமி மலேக்கும், சிறந்த நடிகைக்கான விருதை 'தி ஃபேவரைட்' திரைப்படத்துக்காக ஒலிவியா கோல்மேனும், சிறந்த இயக்குநருக்கான விருதை 'ரோமா' திரைப்படத்துக்காக அல்போன்சா குவாரனும் பெற்றனர்.
'ஏ ஸ்டார் இஸ் பார்ன்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஷாலோ என்னும் பாடலை பாடியதற்காக பிரபல பாப் பாடகி லேடி காகா உள்ளிட்ட குழுவினர் சிறந்த பாடலுக்கான விருதை பெற்றனர்.

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகள் விழாவில் நடந்த முக்கிய சம்பவங்கள்:

  • இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பிலிருந்து நடிகர் கெவின் ஹார்ட் விலகியதால், தொகுப்பாளர் இல்லாமலே ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்', சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.
ரோமா திரைப்படத்திலுள்ள ஒரு காட்சிபடத்தின் காப்புரிமைNETFLIX
Image captionரோமா திரைப்படத்திலுள்ள ஒரு காட்சி
  • இந்த ஆண்டு ஆஸ்காரில் அதிகபட்சமாக 'போமேனியன் ராப்சோடி' திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றது.
  • உலகம் முழுவதும் வசூலில் பெரும் சாதனை படைத்த 'பிளாக் பாந்தர்' திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு, பின்னணி இசை, தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றது.
  • 'பிளாக் பாந்தர்' திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை பெற்ற ரூத் கார்ட்டர், இதன் மூலம், இந்த பிரிவில் ஆஸ்கார் விருதை பெறும் முதல் ஆஃப்ரிக்க அமெரிக்கர் என்னும் பெருமையை பெற்றார்.