அணி வகுப்பு மரியாதை




(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை 15.02.2019 அன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் ஈ.ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு அட்டன் டன்பார் மைதானத்திலிருந்து ஆரம்பமான பொலிஸ் அணிவகுப்பு, அட்டன் நகர் வழியூடாக அட்டன்பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஈ.ஜயசூரிய, பொலிஸ் வாகனங்களை சோதனைக்குட்படுத்திய அதேவேளை இதுவரை காலமும் அட்டன் பொலிஸ் நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றிலுள்ள குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரிடம் கலந்துரையாடினார்.

இந்த வருடாந்த அணிவகுப்பு மரியாதையின் போதுஇ அட்டன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர், கோட்டம் ஒன்றிற்கான உதவி அத்தியட்சகர், கோட்டம் இரண்டிற்கான உதவி அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.