இலங்கை வரலாற்றில் அதிகப்படியான ஹெரோயின் ரக போதைப் பொருட்களை நேற்று (23) மாலை கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயினின் அளவு 294 கிலோ 49 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஹெரோயின் பெறுமதி 2945 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களுடன் இரு வேன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 மற்றும் 43 வயதுடைய பாணந்துரை, கெசெல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment