கிம் ஜோங் உன் வியட்நாம் சென்றடைந்தார்




வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் வியட்நாம் சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

வடகொரிய தலைவரின் விஜயத்தின் போது அவர் அமெரிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் வட கொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் பொருளாதாரத்தில் சக்தி மிக்க உலக நாடுகளில் ஒன்றாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த டிரம்ப், வேறெந்த நாட்டையும் விட அதிவேகமாக வளரும் வாய்ப்பு வடகொரியாவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

வடகொரியா இன்னமும் ஓர் அணு ஆயுத அபாயம்தான் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்த சில மணி நேரங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து வெளியாகியுள்ளது. 

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இருவரும் 2 வது முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் கலந்துரையாடவுள்ளனர். 

வியட்நாம் தலைநகர் ஹனோயில் இந்த சந்திப்பு வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.