கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 2945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ 490 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (23) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த ஹெரோயின் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது இரு வேன்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் விற்பனை செய்யும் நோக்கத்தில் குறித்த ஹெரோயின் தொகை வைத்திருந்ததாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Post a Comment
Post a Comment