பொத்துவில் சமூக செயற்பாட்டாளர் முஹஸ்ஸமின் புதல்வர் உயிரிழப்பு




ஓமான் நாட்டில் ஏற்பட்ட வாகன விபத்தில் பொத்துவிலை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் அதிகமான சமூக சேவைகளில் தன்னுடைய நிதியினை தயக்கமின்றி வழங்கக்கூடியவருமான சகோதரர் Muazzam A Muhamed அவர்களுடைய ஒரு மகன் வபாத்தாகியுள்ளதோடு இன்னொரு மகன் சிகிச்சை பெற்றும் வருகிறார்.
இந்த விபத்தில் அக்கறைப்பற்றை சேர்ந்த சக்கி எனும் சகோதரருடைய மனைவியும் இரு பிள்ளைகளும் வபாத்தாகியுள்ளதோடு அவரும் அவருடைய மகன் ஒருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வபாத்தாகியவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ளவும், வைத்தியசாலையில் உள்ளவர்கள் குனமாகவும் வேண்டி உங்களுடைய பெறுமதியான துஆக்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.