பிடிபட்ட இந்திய விமானியைக் கண்ணியமாக நடத்துங்கள்!




டெல்லி: 
பிடிபட்டுள்ள இந்திய விமானியை பாகிஸ்தான் மரியாதையாக நடத்த வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் பூட்டோவின் உறவினர் ஃபாத்திமா பூட்டோ உள்பட பாகிஸ்தானியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது நடந்த சண்டையின்போது இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த விமானத்தின் விமானி அபிநந்தனை அந்நாடு பிடித்து வைத்துள்ளது.