வடக்கு முடங்கியது




வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின் அமையத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளின் கண்ணீருக்கு முடிவு என்ன? என்ற கருப்பொருளிலான பூரண ஹர்த்தல் இன்று (25) யாழ். மாவட்டத்திலும் இடம்பெற்றன. 

இவ் உறவுகளின் போராட்டத்தின் 2 ஆண்டுகள் நிறைவினை இவ் பூரண ஹர்த்தல் நினைவு கூறுகின்றனர். 

வர்த்தக நிலையங்கள், தொழிற்கூடங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள், பிரதான புடவைக் கடைகள் மற்றும் அரச நிறுவனங்கள் தமது அன்றாட திறப்பு சேவையினை நிறுத்தி ஆதரவினை இவ் பூரண ஹர்த்தலுக்கு கொடுத்து உள்ளனர். 

இதனை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் தொடங்கி கிளிநொச்சி 55 ஆம் கட்டையில் அமைந்துள்ள யூ.என் அலுவலகத்திற்கு சென்றடைந்து மனு கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.