இந்தியா - பாகிஸ்தான் முறுகல், இம்ரான்கான் முன் உள்ள சவால்கள்




சர்ச்சைக்குரிய காஷ்மீருக்குள் இந்திய விமானங்கள் நுழைந்தது மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாக்டுன்க்வா மாகாணத்தில் பாலகோட் பகுதி வரை சென்றிருக்கின்றன. (இதைத் தொடர்ந்து இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் விமானம் ஒன்றை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், இந்திய விமானம் ஒன்றும் இதில் வீழ்த்தப்பட்டதாகவும் இந்தியா கூறியுள்ளது).
ஒரு முகாம் அழிக்கப்பட்டதா இல்லையா என்பது இப்போது பிரச்சினை கிடையாது. நாட்டின் வான் எல்லைக்குள் `எதிரி நாட்டு' விமானங்கள் நுழைந்தன என்பது அந்நாட்டுக்கு கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் வான் எல்லையில் அத்துமீறுவது புதிய நிகழ்வு கிடையாது. எல்லை தாண்டுவது, சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெளிவாக எச்சரிக்கை விடுத்த பிறகும், அமெரிக்க ராணுவம் அதுபற்றி இரண்டு தருணங்களில் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
முதலில், நாட்டின் மேற்குப் பகுதியில், மஹ்மந்த் ஏஜென்சி பகுதியில் பாகிஸ்தான் ராணுவ நிலை ஒன்றை அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்கி பாகிஸ்தான் வீரர்கள் 11 பேரைக் கொன்றது. அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு, தேவையான பொருட்களை வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது. அமெரிக்கா மன்னிப்பு கேட்கும் வரையில், பல மாதங்களுக்கு அந்தத் தடை நீடித்தது. இரண்டாவது முறையாக அபோட்டாபாத் நகரில் அமெரிக்கா பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தி ஒசாமா பின் லேடனை கொன்றது. அப்போதும், எதிர்ப்புகள், விளக்கங்களைத் தவிர, பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை.

இம்ரான்கான்படத்தின் காப்புரிமைPOOL

ஆனால், இந்தியாவுடனான சூழ்நிலை சற்று மாறுபட்டது. இந்தியாவை முதலாவது எதிரியாக பாகிஸ்தான் ராணுவம் இப்போதும் கருதுகிறது. இந்தப் பெரிய தாக்குதலைப் புறக்கணித்துவிட முடியாது என்பது பொதுவான கண்ணோட்டமாக இருக்கிறது. மேற்குப் பகுதியில் எல்லையில் அத்துமீறலைத் தொடர்ந்து, கிழக்குப் பகுதியிலும் அத்துமீறல் நடந்திருப்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. சிப்டே அலி சபா சொன்னதைப் போல -
(சிதிலமடைந்த என் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததைப் போல, என் மனதிலும் மக்கள் பாதிப்பை ஏற்படுத்தினர்....)
தங்கள் நாடு மரியாதை கொண்டிருக்கும் நாடு என்பதை உலகிற்கு நிரூபிக்க இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலமாக இது இருக்கலாம். நாட்டைவிட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இது மரியாதை குறித்த விஷயமாக இருக்கலாம். ஆனால், நாட்டின் அணுசக்தி இடங்களை நிர்வகிக்கும் தேசிய கமாண்ட் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டியிருப்பது, மிகவும் ஆபத்தான நடவடிக்கை.

இம்ரான்கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எந்த விஷயத்திலும் பின்வாங்காதவர் என்று புகழப்படும் இம்ரான் கான், நிச்சயமாக போர் குறித்த விஷயத்தில் பின்வாங்க வேண்டும் என்று, போரை எதிர்ப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனந்தம் கொள்வதற்கு இது பிக்னிக் அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். சுற்றிலும் இந்தியா நெருக்கிவிட்ட நிலையில், இது மாறுபட்ட சூழ்நிலையாக உள்ளது. ``மக்களின் விருப்பத்துக்காக செயல்படுவதா'' அல்லது முதிர்ச்சியுடன் செயல்படுவதா என்பது இம்ரான் கானின் முடிவைப் பொருத்து அமையும்.
போர்க்களத்தில் சந்திப்பதற்கு அப்பாற்பட்டு, தூதரக முயற்சிகளை வேகப்படுத்தப் போவதாகவும் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இந்தியாவின் `பொறுப்பு காட்டாத' கொள்கை குறித்து உலகத் தலைவர்களிடம் சொல்வது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. அதுதான் சிறந்த அணுகுமுறையாக இருக்கும். பாலகோட் தாக்குதலை இந்தியா நடத்துவதற்கு முன்னதாக, உலகத் தலைவர்கள் எத்தனை பேரின் நம்பிக்கை பெறப்பட்டது என்பதும் தெரியவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தால், சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு உள்ள நம்பிக்கையாக இருக்கும். வழக்கம்போல ராணுவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அனைவரும் அறிக்கைகளை வெளியிடுவது பொதுவாக நடக்கும் விஷயம்.

இம்ரான்கான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இம்ரான் கானைவிட, பாஜ்வா கோட்பாடு என்னவாகும் என்று, மக்கள் பலரும் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள். அந்தக் கோட்பாட்டின்படி, பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வா, அமைதி வழிக்கு ஆதரவானவராகக் கருதப்படுகிறார். பரஸ்பர உறவுகளை சுமுகமானதாக ஆக்குவதற்கு, இந்தியாவுடன் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பது என்பது இந்தக் கோட்பாட்டின் முக்கிய அம்சம். பாஜ்வா கோட்பாடு என்பது கடந்த கால வரலாற்றுக் கதையைப் போல ஆகிவிடுமா?
போர்க்களத்திலோ, தூதரக அளவிலோ நடப்பது எதுவாக இருந்தாலும், நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்பதுதான், இம்ரான் கானுக்கும் மக்களுக்கும் உள்ள உண்மையான பிரச்சினையாக உள்ளது. போர் ஏற்பட்டால், மோசமாகி வரும் பொருளாதார நிலைமையைக் கையாள்வதற்கு இம்ரான் கானுக்கு என்ன வழிகள் இருக்கின்றன? போரின் சுமையை தாங்கும் சக்தி அந்த நாட்டுக்கு இருக்கிறதா? நாடாளுமன்றத்திலும் கூட, பல அரசியல் கட்சிகள் அரசுக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. குறுகிய அவகாசத்தில் எதிர்காலத்தில் சூழ்நிலைகளில் முன்னேற்றம் இருக்கும் என்று காட்டுவதாக இரு தரப்பிலும் வெளியாகும் அறிக்கைகள் இல்லை. மற்றொருபுறம், உலக நாடுகள் அமைதி காப்பது, புரிதலுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.