அதிக வேகப் பாதையில்,இலத்தரனியல் அட்டை முறை




அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது நடைமுறையில் உள்ள பணம் கொடுக்கும் முறையை இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையாக விருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்தார். 

தற்போது கட்டுநாயக்க அதிவேக வீதியில் இந்த முறைமை நடைமுறையில் உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த முறை நாட்டில் உள்ள சகல அதிவேக வீதிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவருவதே இலக்காகும் என அவர் குறிப்பிட்டார். 

இலத்திரனியல் கொடுப்பனவு முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதனால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் கிடைக்குமென பணிப்பாளர் தெரிவித்தார். 

ஒரு அதிவேக வீதியுள் உள் நுழைந்த பின்னர் மற்றைய அதிவேக வீதிக்கு இந்த வசதியை பயன்படுத்த முடியும். இதற்காக விசேட காட் விநிநோகிக்கப்படும் எனவும் சமன் ஒப்பநாயக்க தெரிவித்தார். 

அரச தகவல் திணைக்களம்