(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண முன்பள்ளி பணியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக ஆதம்பாவா தௌபீக் இன்று (31) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் முன்பள்ளி பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக முன்னாள் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம இருந்த காலப்பகுதியில் சிறந்த முறையில் சேவையாற்றியமையால் குச்சவெளிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆதம்பாவா தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஷ்புள்ளாஹ் அவர்கள் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
மாகாண ஆளுநர் அவர்களுக்கு புல்மோட்டை மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
Post a Comment
Post a Comment