Breaking:திருமலை பிரதம நீதவான் ஹம்சா சுகம் பெற,பிரார்த்தனைகள்




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா நேற்றிரவு (29) நெஞ்சு வலி காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதியில் இருக்கும்போது நேற்றிரவு தலைசுற்று  மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனையடுத்து அவரது பாதுகாவலர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 
Attachments area