இலங்கையின் லண்டன் துாதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெணாண்டோவுக்கு எதிரான வழக்கு லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றில் தற்போது விசாரணை செய்யப்படுவதாக, லண்டனிலுள்ள #ceylon24 விசேட செய்தியாளர் அலி தெரிவித்துள்ளார்.
கடந்த நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்கபெர்னாண்டோ கழுத்தை அறுப்பேன் என்று சைகை மூலம் எச்சரிக்கை காண்பிக்கும் ஒளிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து இவரை பதவியிலிருந்து நீக்குமாறு வெளிவிவகார அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ஜனாதிபதி தடுத்து நிறுத்தியதுடன் பிரிகேடியரை தொடர்ந்தும் பதவியில் அமர்த்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
Post a Comment
Post a Comment