திறப்பு விழா




(க.கிஷாந்தன்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஒலிபென்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் 20.01.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்று தேவை என இராஜாங்க கல்வி அமைச்சராக செயல்பட்ட போது அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்த புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தரம் 1 முதல் தரம் 5 வரை இயங்கும் இப்பாடசாலையில் சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இதன்போது அமைச்சர் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைப்பதினையும், அருகில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் அவர்கள் உட்பட வலய கல்வி பணிப்பளார், அதிபர், ஆசிரியர்கள் இருப்பதனையும், இடம்பெற்ற நிகழ்வுகளையும், அதிதிகள் முன்வரிசையில் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.