போலி நாணயத் தாள்களுடன் கைது செய்யப்பட்டவருக்கு, விளக்க மறியல்




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம். பீ. அன்பார் முன்னிலையில் இன்று (31) ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே இடத்தைச் சேர்ந்த அபூபக்கர் தௌபீக் (52வயது) எனவும் மொரகேவ பொலிஸார் தெரிவித்தனர். 

போலியான ஐயாயிரம் ரூபாய் தாள்கள் 16, ஆயிரம் ரூபாய் தாள்கள் 95 ஐயும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்