அமெரிக்காவின் மேற்கு திசையில் தட்ப வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
துருவப்பகுதியான அண்டார்டிக்காவின் பகுதிகளை விட அதிக குளிர்ச்சியாக சிகாகோ இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 6 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
அடிக்கும் குளிர் காற்று மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால், சில நிமிடங்களில் குளிர்நடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடுங்குளிரை 250 மில்லியன் அமெரிக்கர்கள் சந்திக்கவுள்ள நிலையில், 90 மில்லியன் பேர் -17 டிகிரி செல்சியஸ் டிகிரி வானிலையை எதிர்கொள்ள உள்ளனர்.
அடுத்த வார இறுதியில், -28 டிகிரி செல்சியஸ் தட்பவெட்பநிலையை 20 மில்லியன் அமெரிக்க மக்கள் அனுபவிக்க நேரும்.
Post a Comment
Post a Comment