(காரைதீவு நிருபர் சகா)
மூவின மாணவர்கள் கல்வி கற்கின்ற வலயமாகத் திகழும்சம்மாந்துறை வலய
சமாதான
தைப்பொங்கல் விழா இன்று (25) வெள்ளிக்கிழமை ஸ்ரீ
கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்
எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெறற்றபோது பிரதம அதிதியாக
கிழக்குமாகாண மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து
சிறப்பிப்பதையும் பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெறுவதையும்
மூவினமாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மேடையேறுவதையும் காணலாம்.
இவ்விழாவில் சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த 3 இளம்
சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.88 கண்டுபிடிப்புக்களில் 30
விருதுகளைப்பெற்ற இளம் விஞ்ஞானி வினூஜன் , 2018 உயர்தரத்தில்
உயிர்முறைமைகள் தொழிநுட்பத்தில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்ற
MB.றீஸா முகம்மட் மற்றும் பொறியியல் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு
மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவன் MS.ஹினாஸ் ஆகியோர்களுக்கு
மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி
கௌரவிக்கப்பட்டன.
Post a Comment
Post a Comment