மாதின்னாகொடயில், விபச்சார விடுதி சுற்றி வளைப்பு




வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகிரிய, மாதின்னாகொட பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

நேற்று (29) இரவு 9 மணிளயவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெலிகட பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த விபச்சார விடுதிக்கு பொறுப்பாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பங்கதெனிய பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.