(க.கிஷாந்தன்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதோடு, மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் 30.01.2019 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவனும், மனைவியும் தனது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு இவர்களை கொட்டியுள்ளது.
குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி சுப்பிரமணியம் (வயது – 72) என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment