அக்கரைப்பற்று வலயத்தில், சிங்களம் போதிக்க ஆசிரியர் பற்றாக்குறை





(வைப்பகப் படம்).
(இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் தேசிய மொழிகளில் சிங்களமும் ஒன்று. அது கல்லுாரிகளில் போதிக்கப்பட்டு வருகின்றது.  சிங்களப் பாடம் பாட விதானத்தில் சேர்க்கப்பட்டு ஒரு பாடமாக அங்கீகரிக்கப்பட்டு ஆரம்பப் பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வந்தாலும், உரிய மொழிப் பயிற்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக் குறையாகக் காணப்படுகின்றது.


அக்கரைப்பற்றுப் பாடசாலைகளில், சிங்கள மொழியைக் கற்பிற்கும் ஆசிரி-யர்கள் குறைபாடுகள் பன்னெடுங் காலமாக் காணப்படுகின்றது. இது பற்றி கல்வி அதிகாரிகள், அதிபர்கள் கடந்த காலங்களில், துறை சார் அமைச்சர்களுக்கு அறிவித்திருந்தும் உரிய பலன் கைகூடவில்லை. 

இந்த விடயத்தினை அறிந்த பெற்றோர்கள் சில பாடசாலைகளில், அதிபர்களிள் ஆலோசனையுடன் நலன் விரும்பிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலங்கள் பங்களிப்புடன் தொண்டர் ஆசிரியர்களைப் பணிக்கமர்த்தி,அவர்களுடைய வேதனங்களை செலுத்தி வந்துள்ளனர்.

அண்மைக் காலமாக, விரும்பிகளால், தொண்டர் ஆசிரியர்களுக்கு கொடுக்கப் பட்டு உதவு தொகை நிறுத்தப்பட்டதால், கல்லுாரிகள் சிங்கள ஆசிரியர்களை கொடுப்பனவுகள் இன்றி நியமிப்பதில் நெருக்கடிகளை எதிர் கொண்டன.இதனால், மாணவர்கள் ஒரு நாட்டின் அடிப்படை தேசிய மொழிகளில் ஒன்றை கற்க  முடியாத நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதனை நிவர்த்திக்கும், வகையில் ஒவ்வொரு மாணவரிடமும் இருந்து, தவணை ஒனறுககு ரூபா 100/- அறவிடப்படுகின்றது. 

இந் நெருக்கடிக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டுமென பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் இது உங்கள் கவனத்திற்கு!