(க.கிஷாந்தன்)
சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் முகமாவும், மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
20.01.2019 அன்று மாலை மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த ஆளுநர் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
நல்லதண்ணி பகுதிக்கு சென்ற அவர், சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் திடீர் சுகயினமுற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, மஸ்கெலியா வைத்தியசாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் செண்பகவள்ளி, அம்பகமுவ பிரதேச சபை தலைவர் ஜயசிங்க பெரேரா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment