பாடசாலைகளில் பணம் வசூலிப்பது சம்பந்தமான சுற்றறிக்கை இரத்து




பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்ய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார். 

கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 

குறித்த சுற்றறிக்கை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி கல்வியமைச்சின் முன்னாள் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது. 

அதன்படி 26/2018 என்ற சுற்றறிக்கை இரத்து செய்யப்படுவதுடன், அதற்குப் பதிலாக பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பணம் பெற்றுக்கொள்வது சம்பந்தமான 5/2015 என்ற சுற்றறிக்கை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.