சலசலக்குது 'சார காத்து' பாடலை திருடினாரா வைரமுத்து




வைரமுத்து அவர்களிடம் ஒரு கோரிக்கை, விக்கிபீடியா உட்பட ஏனைய தளங்களிலும் இந்த பாடலை எழுதியவர் கார்த்திக் என மாற்றப்பட்டுவிட்டது, இயக்குனர் ஒரு சார் கேட்டு நீங்கள் மூணு சார் எழுதிய கதை இப்ப சகல சனத்துக்கும் தெரியும் சார், இதன் பிறகும் இந்த பாடலுக்கான விருதுகளை நீங்கள் வைத்து கொண்டிருப்பது அழகல்ல சார். உங்கள் பாணியில் சொல்வதென்றால், எழுத்தால் இதயங்களை திருடலாம், ஆனால் எழுத்தாளனிடம் திருட கூடாது. நீங்கள் சின்மயிடம் தப்பலாம், உண்மையிடம் தப்ப முடியாது. திருந்துங்கள், விருதுகளை திருப்பி தந்து விடுங்கள்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் நிறைய பேர் பதிவிட்டு வருகின்றனர்.

இது பற்றி, வைரமுத்து இன்னும் வெளிப்படையாக கூறவில்லை. கார்த்திக் நேதா, ஒரு பேட்டியில், நான் எழுதிய டிராக் பாடலை தான், அந்த பெருங்கவிஞர் மேலும், கீழும் மாற்றிப்போட்டு பாடலாக்கிவிட்டார்.

இதுபற்றி இயக்குநர் என்னிடம் சொன்னார். பாடலுக்கான முழு பணத்தையும் அந்த கவிஞருக்கு கொடுத்துவிட்டோம் என்றார். இந்த குற்ற உணர்ச்சி இசையமைப்பாளருக்கும் இருந்தது. அதனால் தான் இன்னொரு பாடலில் எனது பெயரையும் அவரது பெயரையும் சேர்த்து வெளியிட்டார்கள். அந்த கவிஞர் வைரமுத்து, பாடல் சர சர சார காத்து என கூறியிருக்கிறார் கார்த்திக்.

இந்த குற்றச்சாட்டு வைரமுத்து இதுவரை பதில் அளிக்கவில்லை.


விளம்பரமும் வைரமுத்துவும்:



விளம்பரத்தின் மீது வைரமுத்துவுக்கு எப்போதுமே கொள்ளைப் பிரியம். அதற்காக அவ்வப்போது சர்ச்சையாகவும் பேசுவார். இந்து மத எதிர்ப்பு கருத்துகளையும் நிறைய கூறுவார்.

தனக்குத் தானே பட்டங்களையும் அவர் கொடுத்துக்கொள்வார். கவிஞர் கண்ணதாசனுக்கு தான் கவியரசு என்ற பட்டம் உள்ளது. கண்ணதாசனை விட தான் பெரிய ஆள் என காட்டிக்கொள்வதற்காக, ''கவிப்பேரரசு'' என்ற பட்டத்தை, ஒரு ஜால்ரா கூட்டத்தை விட்டு கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொண்டார்.



இனிமேலா பெரிய ஆள:

விருதுகளையும் பட்டங்களையும் பெற்று இனிமேல் தான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவசியம் வைரமுத்துவுக்கு இல்லை. கவிஞர் கார்த்திக் நேதா போன்ற இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தினால் அவருக்கு மேலும் பெருமை தான். அதை செய்யாமல், அடுத்தவர் புகழை இவர் அபகரிக்கிறார் என்ற அவப்பெயர் எடுத்துள்ளார்.


வைரமுத்துவிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?