ஊருகஸ்மங்ஹந்திய பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றின் மதில் ஒன்று உடைந்து விழுந்ததில் பாதையில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) மாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊருகஸ்மங்ஹந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மதில் உடைந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
48 வயதுடைய ரோஹினி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த விற்பனை நிலையம் ஒன்றின் சி.சி.ரி.வி கெமராக்களில் பதிவாகி இருந்தது.
சம்பவம் தொடர்பில் ஊருகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment