பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் நீதியரசர்கள் குழாமிலிருந்து மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர் இதிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நகரசபை உறுப்பினர் சாந்தினி கோனவலயால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment