ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி




ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் பெயரில் மோசடி செய்து நாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காக கொண்டு போலியாக மின்னஞ்சல் பரிமாற்றம் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தினால் அவ்வாறான எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இந்த போலிய மின்னஞ்ஞல் சம்பந்தமாக அவதானமாக செயற்படுமாறு நாட்டின் நிதி நிறுவனங்களிடம் இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் அறிவித்தல் என தெரிவித்து மின்னஞ்சல் ஏதாவது கிடைத்தால் அதனை திறக்க வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் வேண்டிக் கொண்டுள்ளது.