திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் இலவசக் கல்வி இல்லையெனப் பெற்றோர்கள் விசனம்






(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் இலவசக் கல்வி இல்லையெனப் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இம்முறை முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக மொரவெவ பிரதேசத்திலுள்ள பிரபல முஸ்லிம் பாடசாலையொன்றில் தலா 2,300 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளதாக, பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் கல்வியை மேற்கொள்வதற்காக, முதலாம் தரத்துக்குரிய ஆசிரியர் இல்லையெனவும் பெற்றோர்களின் பணத்தைக் கொண்டுதான் ஆசிரியரை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தே, மேற்படி பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன், மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக  பெற்றோர்களிடம் தலா 350 ரூபாய்  பணமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தால் பல நிகழ்ச்சி நிரல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லையென, அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.