நிலவில் முளைத்து, பருத்தி




பீஜிங், நிலாவில் தரை இறங்கிய சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது.நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய &'சேஞ்ச் -4&' விண்கலம் அங்கு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மேலும், நிலவின் தரையில் ஊர்ந்து ஆய்வு செய்து வரும் &'யாடு&' என்ற கலமும் தனியாக ஆய்வு நடத்துகிறது.

இந்நிலையில் சீன விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், &'சேஞ்ச் -4&' விண்கலத்துடன் சீனா அனுப்பிய பருத்தி விதைகள் முளைக்கத் தொடங்கி உள்ளன.இதன் மூலம் அங்கு உயிரினங்கள் வாழும் சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் உருளைக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களையும் முளைக்க வைக்க சீன விஞ்ஞானிகள்ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.பூமியை போலவே நிலவிலும் பயிர்கள் வளர்ந்தால், மனிதகுடியேற்றத்திற்கு நாள் குறிக்க முடியும்என எதிர்பார்ப்பு நிலவுகிறது