கூட்டு ஒப்பந்தம்




(க.கிஷாந்தன்)
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்ப அலரி மாளிகையில் இன்று (28.01.2019) 12.00 மணியளவில் அடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், கூட்டு தொழிலாளர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.