இலங்கையில்,உலகின் மாபெரும் இளைஞர் மாநாடு




உலகின் மாபெரும் இளைஞர்கள் மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் இலங்கையில் நடைபெறவுள்ளது.
(AIESEC) இலங்கை அமைப்பின் தலைவர் இசுறு பிரேமதிலக்க உள்ளிட்ட நான்கு பிரதிநிதிகள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவை அலரி மாளிகையில் நேற்று முன்தினம் (22) சந்தித்தது கலந்துரையாடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது (AIESEC) ​அமைப்பின் உத்தியோகப்பூர்வ இலட்சினையும் வெளியிடப்பட்டதுடன், சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இம்மாநாடு வருடாந்தம் நடத்தப்படவுள்ளது.
இளைஞர்களின் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் , கலாச்சார வேறுப்பாடுகள் தொடர்பில் தெளிவூட்டல் மற்றும் பூகோள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இம்மாநாட்டின் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.