காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி பொது செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி அதிகமாக அதிகமாக மது அருந்திய நிலையில் இருப்பதாக காட்டும் ஒரு காணொளி வலதுசாரி ஆதரவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
காணொளியின் ஒரு சிறிய பகுதியாக 10 வினாடிகள் கொண்ட கிளிப்பில் ஊடகத்தினரை நோக்கி உரத்த குரலில் பிரியங்கா காந்தி கத்திக் கொண்டிருப்பது போல் உள்ளது
''உங்களால் இப்போது இங்கிருந்து அமைதியாக கிளம்ப முடியுமா?'' என்று ஊடகத்தினரை பார்த்து பிரியங்கா கேட்கும் அந்தக் காணொளி பல ஆயிரம் பேரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
வைரலான இந்த காணொளியில் உள்ள தகவல்களை மறைப்பதற்காக அதன் உள்ளடக்கம் வேண்டுமென்றே தெளிவற்று மங்கலாக உள்ளது.
''ஆதித்யநாத்துக்கே என் ஆதரவு', 'ராஜ்புத் சேனா' மற்றும் 'மோதி மிஷன் 2019' ஆகிய சமுகவலைத்தள பக்கங்களில் இந்த காணொளி அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
- பிரியங்கா அடுத்த இந்திரா காந்தியாக முடியுமா?
- மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ததா பாஜக? - என்ன சொல்கிறார் சையத் சுஜா?
மது அருந்தியதால் ஊடகத்தினருடன் பிரியங்கா கடுமையாக நடந்து கொண்டதாக இந்த பக்கங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது குறித்த எங்களின் ஆராய்ச்சி மேற்கூறிய கூற்றுக்களை பொய்யென கண்டுபிடித்துள்ளது.
காணொளியின் முகப்பில் உள்ள சிறு படம் (thumbnail) இந்த காணொளி 2018 ஏப்ரல் 12-ஆம் தேதியன்று எடுக்கப்பட்டுள்ளதை காண்பிக்கிறது.
கத்துவா மற்றும் உனாவ் பாலியல் சம்பங்களுக்கு எதிராக நடந்த எதிர்ப்பு பேரணியில் தனது தம்பியும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன் பிரியங்கா கலந்து கொண்டார்.
தனது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகள் மிரயா ஆகியோருடன் இந்த பேரணியில் பிரியங்கா கலந்து கொண்டார். 'மோதி பாகாவ், தேஷ் பச்சாவ்' என்பதே இந்த போராட்டத்தில் முக்கிய கோஷம்.
இந்த கூட்டத்தின்போது ராகுல் மற்றும் பிரியங்காவை சந்திக்க காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்வம் காட்டினர். அதனால் பிரியங்காவால் போராட்டத்தின் மையப்பகுதியான இந்தியா கேட்டை அடைய முடியவில்லை.
கட்டுக்கோப்பு மற்றும் ஒழுங்கில்லாமல் கூட்டத்தினர் நடந்து கொண்டது பிரியங்காவை வருத்தமடைய செய்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கோபமடைந்த பிரியங்கா கட்சி தொண்டர்கள் மற்றும் ஊடகத்தினரிடம் அமைதியாக போராட்ட களத்துக்கு செல்லுமாறு கூறினார்.
''மற்றவர்களை தள்ளுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லலாம்'' என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மது அருந்தியாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கட்டுக்கோப்பில்லாமல் நடந்துகொண்ட சில போராட்டக்காரார்கள் மற்றும் ஊடகத்தினரிடம் அவர் சினம் அடைந்து சற்றே நிதானம் இழந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு இந்த காணொளி வெளிவந்துள்ளது.
சமுகவலைத்தளங்களில் சிலர் பிரியங்கா குறித்து சுப்ரமணியன் சுவாமி தெரிவித்த ஆட்சேபகரமான கருத்தையும் இந்த காணொளியுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
பிரியங்கா காந்திக்கு பைபோலர் எனப்படும் மாறிமாறி வரும் ஆவேசம் மற்றும் மன அழுத்த பிரச்சனை உள்ளதாக தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி, ''வன்முறையில் ஈடுபடுவது போல அவர் நடந்து கொள்வதால், அவர் பொது வாழ்க்கையில் இருக்கக்கூடாது' என்றும் கூறினார்.
Post a Comment
Post a Comment