பிரேசிலில் அணை உடைந்து விபத்து: 9 பேர் பலி




பிரேசிலில் தென்கிழக்குப் பகுதியில் அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''பிரேசிலின் பர்மாடின்ஹோ பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய அணை ஒன்று வெள்ளிக்கிழமை உடைந்து விபத்துக்குள்ளானதில் அருகிலிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 9 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 125 அதிகமான நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
300 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் தீவிரவாக ஈடுபட்டு வருகின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது

பிரேசிலில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியே சுரங்கத் தொழிற்சாலை அருகே அணை உடைந்து  விபத்து ஏற்பட்டதில் 19 தொழிலாளர்கள் பலியாகினர். 25,000 பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் பெரும் துன்பத்துக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.