(க.கிஷாந்தன்)
எல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட எல்ல - பல்லேகெட்டுவ சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 80 பேர் 17.01.2019 அன்று குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடே இவ்வாறு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 1,2,3,4,5 ஆகிய வகுப்பறைகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் தெமோதர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment