(சா/த) 6 பாடங்களாகின்றது




க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பாடங்கள் 9 இலிருந்து 6 ஆக குறைகிறது.

மாணவர்கள் மீதான தேவையற்ற அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டத்தைத் தயாரிக்கவும் பரீட்சைகளை நடாத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரித்துள்ளார்.

இன்று தரம் 1 மாணவர்களை சேர்க்கும் தேசிய நிகழ்வு கிரியுள்ள கணேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பாடங்களை ஒன்பதில் இருந்து 6 ஆகக் குறைப்பதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.