20 நாய்களை இறக்குமதி செய்ய 4 கோடி 68 லட்சம் ரூபா




கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த 20 மோப்ப நாய்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சிவில் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு எடுத்துவரவுள்ள ஒரு நாய்க்கு 20 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாகவும், மொத்தம் 4 கோடி 68 லட்சம் ரூபா நிதியை செலவு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.