O/L பரீட்சை இன்று




கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (03) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். 

இன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இம்முறை பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் 8 மணிக்கும் முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சார்திகள் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

4,661 பரீட்சை நிலையங்களில் இம்முறை நாடு தழுவிய ரீதியில் பரீட்சைகள் நடைபெறும். 

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 656,641 மாணவர்கள் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.