ICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில்




சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் விஷேட காரியாலயம் ஒன்றை நிறுவ உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே இந்த காரியாலயம் நிறுவப்பட உள்ளது. 

அதனடிப்படையில் குறித்த மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையை இரண்டு மாதத்தில் சமர்பிக்க உள்ளதாகவும் ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.