அக்கரைப்பற்றின் முது பெரும் ஆசியர், அதிபர், கலை இலக்கியவாதி ஹனீபா மாஸ்டர் காலமானார். நாட்டின் பல்வேறு இடங்களில் ஆசிரியப் பணிபுரிந்தார்.
அன்று கடையர் பள்ளிக்கூடம் என அழைக்கப்பட்ட பாடசாலையில் பணியாற்றி அது அல்முனவ்வறா பாடசாலையாக உருப்பெறுவதற்கு தன்னை அர்ப்பணித்து அதிபராகவும் அங்கு பணி புரிந்து ஓய்வுக்கு வந்தார்.
அக்கரைப்பற்றின் மூத்த இலக்கியவாதியான இவர், பல் வேறு பட்ட சமூக நலத்திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திய ஒரு பெருந்தகையெனலாம்.
இவர் டொக்டர் அமீன், ஹம்துான் ஆசரியர் ஆகியோரின் தந்தையுமாவார். நல்லடக்கம் இன்று அக்கரைப்பற்று பத்ர் மையவாடியில் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment