(க.கிஷாந்தன்)
அட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் 29.12.2018 (சனிக்கிழமை) காலை 6.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதுகாப்பாக தோட்ட வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகம், பிரதேச சபை, நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் என பலரும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், 30.12.2018 அன்று மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. உடுதுணிகள், பாய் மற்றும் உலர் உணவு பொருட்கள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.
குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 35 பேரும், சிறுவர்கள் 45 பேரும் அடங்குகின்றமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment