(க.கிஷாந்தன்)
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டதனால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் 27.12.2018 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்கள் தங்கல்ல மற்றும் கணேமுல்ல பகுதியை சேர்ந்த 26,27 ஆகிய வயதுகளுடைய ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாவர்.
சிவனொளிபாதமலைக்கு சென்று யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் திரும்பும் போது, சிவனொளிபாதமலை – நல்லதண்ணி பிரதான பாதையில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் கற்கள் புரண்டுள்ளது.
இதனையடுத்து, கற்களுக்குள் சிக்கிய இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்களை உடனடியாக யாத்திரைக்கு சென்ற சிலர் தூக்கிக்கொண்டு நல்லதண்ணி பிரதேசத்திற்கு வந்துள்ளனர்.
அதன்பிறகு மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
சிவனொளிபாதமலை பகுதியில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டிருந்தது. அதே இடத்தில் தான் மீண்டும் கற்கள் புரண்டுள்ளதாக யாத்தீரிகள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment
Post a Comment