“சகல மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நாளில் நடாத்த வேண்டும்”




நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே நாளில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை வெவ்வேறு தினங்களில் நடாத்தி அரசாங்கத்தின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அதிக செலவை ஏற்படுத்தும் முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை மாத்திரமல்ல, முடியுமானால் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் கூட ஒரே தினத்தில் நடாத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.