ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக் ஏ.ஆர்.எம்.றிபாஸ், தீஷான் அஹமட்
அதிகாரம் ஒருவரிடம் குவிந்து கிடக்கிறது என்பதற்காக, ஹிட்லரின் வாரிசு போல் இனி யாரும் செயற்பட முடியாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியின் முரட்டுப் பிடிவாத்ததுக்கான சிறந்த வைத்தியத்தை, நீதிமன்றம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவர், ஜனாதிபதியைப் பற்றிக் கருத்துக் கூறுவத்துக்கு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த 50 நாள்களில் ஜனாதிபதி யார் என்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருப்பர் என்றும் மிஸ்டர் பீனின் நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்க மட்டுமே முடியுமெனவும் அதுபற்றி ஆராய்ந்து, நேரத்தை வீணாக்குவதில் எந்தப் பயனுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment