காலிமுகத்திடல் நோக்கி படையெடுக்கும் மக்கள்




ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கொழும்பு காலிமுகத்திடலில் கூடியுள்ளனர்.
இந்தப்பேரணியில் பங்குபற்றுவதற்காக சர்வமதத் தலைவர்களும் வருகைத் தந்துள்ளதோடு, குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பேரணியில் கலந்துக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வருவதால் கொழும்பு காலிமுகத்திடலை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.