சட்ட விரோதப் பிரதமர் பதவியைக் கைதுறந்தார்,மஹிந்த ராஜபக்ச




நாடாளுமன்றில் பெரும்பான்மை பெறாமால், ஜனாதிபதி மைத்திரியினால் சட்ட விரோதமாக நியமனம் பெற்ற மஹிந்த ராஜபக்ச ராஜினாமாச் செய்துள்ளார்.


2018/10/26 -2018/12.15 வரையும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்காத – அலரி மாளிகையில் வசிக்காத – மேன்முறையீட்டு நீதிமன்றினால், பிரதமராக செயற்பட முடியாமல் தடுக்கப்பட்ட பிரதமராக மஹிந்த இந்த 50 நாட்களையும் கழித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார். 


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியதாக ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார். 



ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.