(கீர்த்தி)
அக்கரைப்பற்று பொத்துவில் வீதி திருக்கோவில் ஏ.பி.சி அருகில் இன்று காலை, பாதசாரிக் கடவையில் சென்ற சிறுவன் மீது, சோடா ஏற்றி வந்த சிறிய ரக கென்ரர் மோதியுள்ளது.
இதில் காயமுற்ற 8 வயது நிரம்பப் பெற்ற சிறுவன் றுஸ்மிதன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஸ்கேன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அங்கிருந்து அனுப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் இன்று மாலை 3 மணியளிவில் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனையைச் சேரந்த ம.பிரசாந் என்னும் கல்முனையயைச் சேர்ந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment