காரைதீவு நிருபர் சகா.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியின் 110ஆண்டுகள் நிறைவையொட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை வரலாறு காணாத எழுச்சிபூர்வமான சென்றாலியன் நடைபவனி சம்மாந்துறையில் நடைபெற்றது.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இந்நடைபவனியை ஏற்பாடு செய்திருந்தது.பழைய மாணவர்சங்கத்தின் தலைவரும் அதிபருமான முத்து இஸ்மாயில்; தலைமையில் இந்நடைபவனி மிகவும் கோலகலமாக உணர்வ்வுபூர்வமாக நடைபெற்றது.
பழையமாணவர்சங்கம் வெளியிட்ட சென்றாலியன் ரீசேர்ட்டை அணிந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான பழையமாணவர்கள் வலம் வந்தமை கண்கொள்ளாக்காட்சியாகஇருந்தது. இந்நிகழ்வில் குதிரை மாட்டுவண்டில் உழவுஇயந்திரங்கள் மற்றும் ஏனைய வாகனங்களும் கலந்துகொண்டன.
கல்லூரியன் பழைய மாணவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம் மன்சூர் வவுனியா மாவட்ட அரசாங்ன அதிபர் ஜ.எம்.ஹனிபா அமைச்சின் செயலாளர் எம்.ஜ.அமீர் தவிசாளர் எம்.எ.எம்.நௌசாட் உள்ளிட்ட பலமுக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றார்கள்.
பழைய மாணவர்கள் பல்வேறு யுக்திகளைப்பயன்படுத்தி நடைபவனியைச் சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment