ஆளுனர்களுக்கு பதவி விலகுமாறு ஆலோசனை




சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார். 

இன்றைய தினத்திற்கு முன்னர் அவர்கள் குறித்த பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு ஆளுனர்களிடம் விசாரித்த போது அவர்கள், ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அத்துடன் அவர்களுக்கு மீண்டும் ஆளுனர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

குறித்த அறிவித்தலின் பின்னர் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லகாமவிற்கு அவ்வாஙறான அறிவித்தல்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை சுற்றுலா ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30) இரவு மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.