ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 'லா லிகா' தொடர் நடக்கிறது. வாலன்சியா நகரில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, லெவான்டே அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பார்சிலோனா அணிக்கு 35வது நிமிடத்தில் லுாயிஸ் சாரஸ் முதல் கோலடித்தார். பின், 43வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோலடிக்க, முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 47, 60வது நிமிடத்தில் கோலடித்த பார்சிலோனாவின் மெஸ்சி, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். பின், 88வது நிமிடத்தில் பார்சிலோனாவின் பிக்கே தன்பங்கிற்கு ஒரு கோலடித்து கைகொடுத்தார். கடைசி வரை போராடிய லெவான்டே அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 16 போட்டியில், 10 வெற்றி, 4 'டிரா', 2 தோல்வி என, 34 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி முதலிடத்தில் உள்ளது.

Post a Comment
Post a Comment