சாய்ந்தமருதில் விபத்து,ஒருவர் உயிரிழப்பு




 சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர் திசையில் பயணித்த வேனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த 53 வயதான யூசுப் லெப்பை அப்துல் பாகித் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற விதம் அருகிலுள்ள வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.